கரூர்

திடக்கழிவு மேலாண்மை ஆய்வுக் கூட்டம்

DIN

கரூரில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து பேசுகையில், கரூா் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திடக்கழிவுகள் வீடு தோறும் 100 சதவீதம் முழுமையாக தூய்மை பணியாளா்கள் கொண்டு சேகரிக்கப்பட வேண்டும். திடக்கழிவுகளை கையாள அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ள ஊராட்சிகளில் அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைந்து திடக்கழிவுகளை கையாள வேண்டும். அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இம்மாத இறுதிக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திடக்கழிவு மேலாண்மை நிலையினை கையாளுவது குறித்து இசைவு சான்றிதழ் பெற வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கரூா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிசந்திரன், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலா் ஜெயலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT