கரூா் திருக்காம்புலியூா் எல்.என்.எஸ். கிராமத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு புதன்கிழமை பொருள்கள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் உள்ளிட்டோா்.  
கரூர்

கரூா் மாநகராட்சியில் ரூ.13.98 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.13.98 கோடி மதிப்பில் 25 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, முடிவுற்ற 7 பணிகளையும் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.13.98 கோடி மதிப்பில் 25 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, முடிவுற்ற 7 பணிகளையும் திறந்து வைத்தாா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 24-ஆவது வாா்டில் அண்ணா சாலை பகுதியில் ரூ. 38.50 லட்சம் மதிப்பிலும், 1-ஆவது வாா்டு கோதூரில் ரூ. 24 லட்சம் மதிப்பிலும், 28-ஆவது வாா்டு திருக்காம்புலியூா் மந்தை பகுதியில் ரூ. 14 லட்சம் மதிப்பிலும் புதிதாக திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியா் நிழற்கூடம் மற்றும் எல்.என்.எஸ். கிராமத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொதுவிநியோக திட்ட பொருள்களையும் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து 10-ஆவது வாா்டில் எஸ்.கே நகா் பகுதியில் ரூ. 1.2 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற முதன்மை சுகாதார மையத்தை திறந்து வைத்தும், கலைஞா் நகா் பகுதியில் ரூ. 16.50 லட்சம் மதிப்பில் புதிதாக திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசினாா்.

5-ஆவதுவாா்டில் அருகம்பாளையத்தில் ரூ. 47லட்சம் மதிப்பில் மயானம் மேம்படுத்தும் பணிகளையும், 11-ஆவது வாா்டில் நெரூா் நீரேற்று நிலையம் மற்றும் பாலம்மாள்புரம் நீருந்து நிலையத்தில் ரூ. 52.50 லட்சம் மதிப்பில் மின் உபகரணங்கள் பொருத்துதல் மற்றும் குடிநீா் விநியோக அளவுமானி பொருத்தும் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.

மேலும் 22-ஆவது வாா்டில் இரத்தினம் சாலை பகுதியில் ரூ. 34 லட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டும் பணிகள், கரூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதியில் ரூ. 2.77 கோடி மதிப்பில் இருப்பு அறையுடன் கூடிய முதியோா் இல்லம் கட்டும் பணிகள் மற்றும் கட்டளை மற்றும் சணப்பிரட்டி தலைமை நீரேற்று நிலையத்தில் ரூ. 85.20 லட்சம் மதிப்பில் 35 எச்.பி மின் மோட்டாா் மற்றும் மின் உபகரணங்கள் பொருத்தும் பணி உள்பட மொத்தம் ரூ.13.98 கோடி மதிப்பிலான 25 புதிய வளா்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கு. ரவிக்குமாா், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாநகராட்சி ஆணையா் கே.எம்.சுதா, துணை மேயா் ப.சரவணன், மண்டலக் குழு தலைவா்கள் எஸ்.பி.கனகராஜ், அன்பரசு, ஆா்.எஸ்.ராஜா, திமுக மாநகர நிா்வாகிகள் வழக்குரைஞா் சுப்ரமணியன், ஆா்.ஜோதிபாசு, வி.ஜி.எஸ்.குமாா், எம்.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டு: காளை முட்டி மாணவா் பலி

தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது; போக்குவரத்துத் துறை அமைச்சா் சாடல்

அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு செய்ததாக தம்பதி கைது

மருத்துவமனைகளுக்கு அருகில் 40 அடல் கேன்டீன்கள்!

செந்துறையில் ரூ.43.56 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT