பெரம்பலூர்

தேர்வுப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பயிற்சி

DIN

தேர்வுப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான பயிற்சி முகாம், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2 ஆம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு மே 21 ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வானது, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் 3 மையங்களில் நடைபெறுகிறது.  
இத்தேர்வுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்த 4 ஆயிரம் பேரில், தகுதியான 3,684 பேருக்கு தேர்வுக்கூட அனுமதி சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்வு பணியில், 2 கூடுதல் துணைக் கண்காணிப்பாளர்கள், 4 துணைக் கண்காணிப்பாளர்கள், 11 ஆய்வாளர்கள், 39 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 187 பேர் ஈடுபட உள்ளனர். முகாமில், கூடுதல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஞான சிவக்குமார், தங்கவேல், துணை கண்காணிப்பாளர்கள் கார்த்திக், ஜவஹர்லால், மோகன் தம்பிராஜன், குமரவேல் ஆகியோர் தேர்வு அறைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து பயிற்சியளித்தனர்.   ஆய்வாளர்கள் சிவக்குமார், சிவசுப்ரமணியன், ராஜ்குமார் உள்பட காவல் துறையினர் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT