வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து,
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது, 31.3.2013-க்கு முன் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 31.3.2013-இல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 45 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது.
இதர வகுப்பினர்கள் 40 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரு. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியாக இருக்கக் கூடாது. தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருக்கக் கூடாது.
இத் தகுதியுடைய மனுதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 31.5.2018 வரை அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை அளிக்கலாம். ஏற்கெனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என ஆட்சியரால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.