பெரம்பலூர்

வேப்பூரில் நாட்டு விதை திருவிழா

DIN

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் நாட்டு விதை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
குன்னம் வட்டம், வேப்பூர் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற நாட்டுவிதை திருவிழாவில் இருங்கு சோளம், பனி வரகு, கம்பு, வரகு, தினை, குதிரை வாலி, பாரம்பரிய மரபுவகை நெல் ரகங்கள், நாட்டு காய்கறி விதைகள், கீரை வகைகளின் விதைகள், பஞ்ச காவ்யா, மீன் அமிலம், இயற்கை பூச்சி விரட்டிகள், இயற்கை இடுபொருள்கள், இயற்கை விவசாயம் தொடர்பான நூல்கள் ஆகியவை விற்பனைக்கும், காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன. 
இதில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாட்டுக் காய்கறி, கீரை, நெல் விதைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளும், இயற்கையாக சாகுபடி செய்யப்பட்ட பயிர் வகைகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாமரர் ஆட்சியியல் கூடம், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் ஆகிய அமைப்பினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT