மகளை காணவில்லை எனப் புகார்
பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தல், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் புவனேஷ்வரி (21). இவர், டிப்ளமோ செவிலியர் படித்து
பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தல், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் புவனேஷ்வரி (21). இவர், டிப்ளமோ செவிலியர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தாராம். இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி பெரம்பலூர் சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். அவரது பெற்றோர், உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.