பெரம்பலூர்

பொறியியல் கல்லூரியில்  தேசிய அளவிலான கருத்தரங்கம்

DIN

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி  மற்றும் டெக்கான் நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. 
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார். அறிவியல் ஆய்வாளர் எம்.ஜி. கிரிஷன், பேங்க் பஜார் டாட் காம் மேலாளர் எஸ். கவாஸ்கர், திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி துணை பேராசிரியர் பி. செல்வன், டி.ஆர்.பி பொறியியல் கல்லூரி துணை முதல்வர் எம். பிரபாகர், திருச்சி அண்ணா பல்கலைக்கழக துணை பேராசிரியர் டி. செந்தில்குமார் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று, மாணவர்களின் ஆய்வறிக்கைகள், மாணவர்களின் ஆய்வுக்காக அரசால் ஒதுக்கீடு செய்யும் நிதி, செயல்படுத்தும் விதம், மாணவர்கள் அடையும் பயன்கள் குறித்து விளக்கி பேசினர். 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி  மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வறிக்கைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் செய்திருந்தனர்.   ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் வி. தர்மலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT