பெரம்பலூர்

வரலாற்று நூல் மதிப்பீட்டு நிகழ்ச்சி

DIN


பெரம்பலூரில் பதியம் இலக்கியச் சங்கமம் அமைப்பின் சார்பில் வரலாற்று நூல் மதிப்பீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் க. தமிழ்மாறன் தலைமை வகித்தார். வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்னம் எழுதிய, தமிழக வரலாற்றில் பெரம்பலூர் என்னும் நூலை, அரியலூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் க. குமரவேல் மதிப்பீடு செய்து பேசினார்.
பி.கோ. ஐயர் எழுதிய உலகப் படத்திலிருந்து உதிர்கின்றன என்னும் நூல் குறித்து கவிஞர் தே. தேவன்பு, புதுக்கோட்டையின் வரலாற்று சிறப்பு குறித்து கவிஞர் கூத்தரசன் விளக்கினார். கவிஞர் அ. சுரேஷ்குமார், சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வாழ்க்கை வரலாறு குறித்தும், வரலாறும் அதன் தாக்கமும் எனும் தலைப்பில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை விவரித்தார். இதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT