பெரம்பலூர்

அதிமுக 47 ஆம் ஆண்டு தொடக்க விழா

DIN

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், அக்கட்சியின் 47 ஆ வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு புதன்கிமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, பெரியார் ஆகியோரது உருவ சிலைகளுக்கு பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்கள், கட்சி தொடண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், நகர செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் துரை, ராணி, பூவை த. செழியன், மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், மா. வீரபாண்டியன், குரும்பலூர் பேரூர் செயலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்...: அரியலூரில் அதிமுக சார்பில் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியானது, ஒற்றுமை திடலில் தொடங்கி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணியின் போது, மாங்காய் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பேருந்தில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன் கட்சித் தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஜயங்கொண்டம், திருமானூர், தா.பழுர், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் அக்கட்சியினர் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT