பெரம்பலூர்

பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்

DIN

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. 
கருத்தரங்கைத் தொடக்கி வைத்த தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், இடம்பெற்றிருந்த மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் விழா மலரை வெளியிட்டார். 
கல்லூர் முதல்வர் துரைராஜ், துணை முதல்வர் வேல்முருகன், டீன் பிரேமலதா ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சித்ரா, மகாதேவன், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பிருந்தா, கனகராஜ், பெருங்குடி டி.என்.பி.எல் பொறியாளர் சிவக்குமார், நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி பேராசிரியர் அந்தோணிராஜ், அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர் முத்துசாமி ஆகியோர், 
தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளையும், தொழில்நுட்பம் சாராத பல்வேறு வகையான போட்டிகளையும் நடத்தி மாணவர்களின் திறனை ஆய்வு செய்தனர். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT