பெரம்பலூர்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள்

DIN

பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் க. சிவசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்  வெற்றிவேல், துணை முதல்வர் பேராசிரியர் ஜி. ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முனைவர் த. மாயக்கிருஷ்ணன், முனைவர் பாரதி. ஆறுமுகம், முனைவர் பெரியசாமி வெண்பாவூர் சுந்தரம்,  சீத்தா, முனைவர் செந்தில்நாதன் ஆகியோர் போட்டி நடுவர்களாகச் செயல்பட்டனர். 
போட்டிகளில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கவிதைப்போட்டியில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வியல் கல்லூரி மாணவர் பாரதிதாசன்,  கட்டுரைப் போட்டியில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வியல் கல்லூரி மாணவி காவ்யா, பேச்சுப் போட்டியில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பிரசாந்த் ஆகியோர் முதலிடம் பெற்றனர். 
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 வழங்கப்பட்டது. மேலும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 
முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநிலப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் ராமலிங்கம், சுதா, சுகன்யா, செந்தில்குமார் ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT