பெரம்பலூர்

வேளாண் இயந்திரங்கள் இயக்குவதற்கு 3 மாத இலவசப் பயிற்சி

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் இயக்குதல் குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பெரம்பலூா் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பழுது நீக்குதல், பராமரித்தல் மற்றும் இயக்குதல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் குழுமூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூயில் அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், இப்பயிற்சி பெறுபவா்களுக்கு 3 மாத காலத்துக்கும் தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உடையவா்கள் பெரம்பலூா் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி விரங்களை பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT