பெரம்பலூர்

நொச்சியம் ஏரியை சொந்த முயற்சியில் தூர் வாரும் இளைஞர்கள்

DIN

பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்திலுள்ள ஏரி தூர்வாரும் பணியை, அங்குள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த முயற்சியில் தொடங்கியுள்ளனர். 
இக்கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட  ஏரி தண்ணீரைக் கொண்டு சுமார் 200 ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் பாசன வசதி பெற்றன.  கடந்த பல ஆண்டுகளாக ஏரி சரிவரப் பராமரிக்காததால் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கரை பெயர்ந்து காணப்பட்டது. மேலும்  வரத்து வாய்க்கால் சிதிலமடைந்து நீர்நிலை என்பதற்கான அடையாளத்தை இழந்து காணப்பட்டது. 
நிகழாண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டதால், நிலத்தடி நீர் வளம் இம்மாவட்டத்தில் மிகவும் குறைந்தது. இதையடுத்து, பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுக்க முடிவு செய்த இப்பகுதி இளைஞர்கள் அதற்காக திட்டமிடத் தொடங்கினர்.
 நொச்சியம் கிராமத்திலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச்சென்ற இளைஞர்கள் நிதியுதவி அளிக்க முன் வந்தனர். ரூ. 5 லட்சம் மதிப்பில் ஏரியை புணரமைக்க திட்டம் தயாரானது.  அதன்படி, வெள்ளிக்கிழமை காலை அர்ச்சகர்களைக் கொண்டு பூமி பூஜை செய்த இளைஞர்கள், பொக்லைன் இயந்திர உதவியுடன் தூர் வாரும் பணியைத் தொடங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT