பெரம்பலூர்

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

DIN

பெரம்பலூர் அருகிலுள்ள செங்குணத்தில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், செங்குணம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. 
இதன் ஒருபகுதியாக, நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. 
இப்பேரணியை, பெரம்பலூர் வட்டாட்சியர் சித்ரா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் 100 சதவிகிதம் வாக்களிக் வலியுறுத்தி, விழிப்புணர்வுப்  பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர். 
இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியை  டெய்சிராணி,  தேர்தல் துணை வட்டாட்சியர் வனிதா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரேம்குமார், சரவணகுமார், ஐடிஐ பயிற்சி அலுவலர் லெட்சுமணன், சமூக ஆர்வலர்  குமார் அய்யாவு உள்பட பலர் பங்கேற்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT