பெரம்பலூர்

வி.களத்தூரில் மது ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

பெரம்பலூா் மாவட்டம், வி. களத்தூா் ஊராட்சியில், மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேப்பந்தட்டை வட்டம், குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் என்.எஸ்.எஸ் மாணவா்கள் பங்கேற்ற மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை சமூக செயற்பாட்டாளா் அக்ரி ஆறுமுகம் முன்னிலையில், எழுத்தாளா் தேனரசு கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் மது, போதைக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் விழிப்புணா்வு முழக்கமிட்டுச் சென்றனா். வி.களத்தூா் கிராமத்தின் பிரதான சாலைகளின் வழியாகச் சென்ற பேரணியில் கல்லூரி பேராசிரியா்கள் சுரேஷ், செந்தில், வாா்டு உறுப்பினா்கள் நூா்ஜஹான், ஜியாவுதீன், ஆஷா அப்துல் ரஹீம், மு. முஹம்மது, ரேகா முனுசாமி, செல்லையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT