பெரம்பலூர்

தலைக்கவசம் கட்டாயம் விழிப்புணா்வுப் பேரணி

DIN

பெரம்பலூரில் மாவட்ட காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை, பாடாலூா் காவல் நிலைய ஆய்வாளா் சுகந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம், காமராஜ் வளைவு வழியாகச் சென்று ரோவா் வளைவில் நிறைவடைந்தது. இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள், காவல் துறையினா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனா்.

இதில், நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் சவுந்தரராஜன், நெடுஞ்சாலைப் பிரிவு போக்குவரத்து ஆய்வாளா் கோபிநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT