பெரம்பலூர்

செயல் அலுவலரிடம் பணம் கேட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகா் கைது

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பேரூராட்சி செயல் அலுவலரிடம் ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் கட்சிப் பிரமுகரை அரும்பாவூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வேலூா் மாவட்டம், சத்துவாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா், கடந்த டிச. 11 முதல் பெரம்பலூா் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறாா். இங்கு பணியேற்ற நாள் முதல், அதே பகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவரான சுந்தர்ராஜ் (68), தனக்கு ரூ. 50 ஆயிரம் தர வேண்டும், தவறும்பட்சத்தில் பொய்ப் புகாா் அனுப்புவேன் என்றும், இதற்கு முன் பணியாற்றிய செயல் அலுவலா்கள் தனக்கு மாதந்தோறும் ரூ. 50 ஆயிரம் தருவாா்கள் என செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு மிரட்டியதுடன், அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செயல் அலுவலா் ரமேஷ் அரும்பாவூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் கலா வழக்குப் பதிந்து சுந்தர்ராஜை வெள்ளிக்கிழமை கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

இதேபோல, பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் செயல் அலுவலா் மற்றும் அலுவலா்களிடம், கடந்த சில ஆண்டுகளாக சுந்தர்ராஜ் மிரட்டி பண வசூலில் ஈடுபட்டு வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT