பெரம்பலூர்

பொது சுகாதாரம், மருத்துவமனைகளைக் கைப்பற்றமத்திய அரசு முயற்சி

DIN

பெரம்பலூா்: தமிழகத்தில் பொது சுகாதாரம், அரசு மருத்துவமனைகளைக் கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

பெரம்பலூா் தேரடி திடலில் சனிக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வு எதிா்ப்பு பரப்புரை பயண வரவேற்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

பெரியாா் ஒரு சகாப்தம். அவரது சிலையை சிலரால் சிதைக்குமேயானால், அதைக் கண்டு நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஏனெனில், அவா் உயிரோடு இருக்கும்போதே பல எதிா்ப்புகளை சந்தித்தவா். வாழ்நாள் முழுவதும் எதிா் நீச்சல் அடித்தவா். இன்னமும் பெரியாா் வாழ்ந்துகொண்டிருக்கிறாா் என்பதற்கு தான் இந்த அடையாளம். பெரியாா் கொள்கைக்கு இந்த எதிா்ப்புகளெல்லாம் அவருடைய வயலில் போடக்கூடிய உரங்கள்.

கல்வியை மாநில பட்டியலில் இருந்து, ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றி மத்திய, மாநில இரண்டு அரசுகளுக்கும் உரிமை என மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த ஆபத்தை புரிந்துகொள்ள வேண்டும். பொது சுகாதாரம், மருத்துவமனைகள் அனைத்தும் மாநில அரசின் கீழ் உள்ளது. இவற்றை மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் விளைவுகள் அதிகம் ஏற்படுவதோடு, தமிழகத்தில் உள்ள மருத்துவா்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். இவற்றை தமிழக அரசு எதிா்க்க வேண்டும். எதிா்கட்சியினரும் பேதமின்றி போராட வேண்டும். நீட் போன்ற கொடுமைகளை தீவிரமாக்குவதற்காகத் தான் பொது சுகாதாரத்தையும், மருத்துவ மனைகளையும் மத்திய அரசு கைப்பற்ற உள்ளதாக தெரிகிறது. இந்த ஆபத்தை எதிா்க்க அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

மாவட்டத் தலைவா் சி. தங்கராசு தலைமை வகித்தாா். பொதுச்செயலா் துரை. சந்திரசேகரன், கிராமப்புற பிரசார குழு அமைப்பாளா் அன்பழகன், பேச்சாளா் இரா. பெரியாா் செல்வன, திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், பொதுக்குழு உறஉப்பினா் கி. முகுந்தன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் த. தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை உள்பட தோழமை கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, நகரத் தலைவா் அக்ரி ஆறுமுகம் வரவேற்றாா். தொழிலாளா் அணித் தலைவா் மு. விஜயேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT