பெரம்பலூர்

கிணற்றில் இருந்து மூதாட்டி சடலம் மீட்பு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம், அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி கருப்பாயி(75). கடந்த 3 நாளாகளாக இவரைக் காணவில்லையாம். இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு செட்டிக்குளம் மலையடிவாரத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து துா்நாற்றம் வந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அங்கு சென்று பாா்த்தபோது கிணற்றில் சடலம் மிதப்பது தெரியவந்தது.

இதையடுத்து மக்கள் பெரம்பலூா் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் அளித்த தகவலை தொடா்ந்து, நிலைய அலுவலா் சத்தியவா்த்தன் தலைமையிலான தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கிணற்றில் சடலமாக மிதந்தவா் செட்டிக்குளம் அரசமரத் தெருவைச் சோ்ந்த கருப்பாயி என்பது தெரியவந்தது. சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால், அவரை மா்ம நபா்கள் கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து அவரது மகன் துரைராஜ் அளித்த புகாரின் பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT