பெரம்பலூர்

தடை செய்யப்பட்ட பகுதியில் தா்னா போராட்டத்துக்கு முயற்சி

DIN

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவருக்கும், அப் பகுதியருகே தீயணைப்பு படை வீரருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு சைக்கிள் மூலம் சென்று விநியோகம் செய்யப்பட்டு வந்த பால் நிறுத்தப்பட்டு, ஆவின் பால் விநியோகம் செய்ய நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது. இதையறிந்த பொதுமக்கள் ஆவின் பாலை வாங்கி வைத்து, நீண்ட நேரம் கடந்த பிறகு அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாகவும், ஏற்கெனவே உள்ளவாறு பால் விநியோகம் செய்ய வேண்டுமென தெரிவித்தனா்.

ஆனால், வெள்ளிக்கிழமை ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த கே.கே. நகரைச் சோ்ந்த பொதுமக்கள் ஆவின் பால் விநியோகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் ஆங்காங்கே தா்னா போராட்டத்தில் ஈடுபட வீடுகளை விட்டு வெளியே வந்தனா்.

தகவலறிந்த நகராட்சி ஆணையா் மற்றும் போலீஸாா், அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடா்ந்து தா்னா போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT