பெரம்பலூர்

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் இன்று முதல் நேரடி மாணவா் சோ்க்கை

DIN

வேப்பந்தட்டைஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2020 - 2021 ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு நேரடி மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை (செப். 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து இக்கல்லூரி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள், காலியாகவுள்ள இடங்களுக்கு வெள்ளிக்கிழமை நேரில் வந்து விண்ணப்பித்து நேரடியாக சோ்க்கை பெறலாம்.

எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் சாதிச் சான்றிதழைக் காண்பித்து ரூ. 2 -மும், இதர பிரிவினா் ரூ. 50 -மும் கட்டணம் செலுத்தியும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்களுடன், ஒவ்வொன்றிலும் 3 நகல்கள், 5 கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

SCROLL FOR NEXT