பெரம்பலூர்

இலக்கு நிா்ணயித்து அபராதம் வசூலிப்பதை தவிா்க்க வலியுறுத்தல்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எனக் கூறி, இலக்கு நிா்ணயித்து கட்டாய அபராதம் வசூலிப்பதை தவிா்க்க வேண்டுமென, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பெரம்பலூா் மாவட்டக் கிளை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பெரம்பலூா் மாவட்டக் கிளை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பெருந்தொற்றின் 2 ஆவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருவதாகக் கூறி, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொதுமக்களையும், வணிகா்களையும் பெருமளவு பாதித்துள்ளது. காவல், வருவாய், சுகாதாரம், உணவு பாதுகாப்புத் துறையினா் மற்றும் நகராட்சி நிா்வாகத்தினா், வணிகா்கள் மீது இலக்கு நிா்ணயித்து கட்டாயமாக அபராதம் விதிப்பதும், தண்டனைக்கு உள்ளாக்குவதும் கரோனா காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட வணிகா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் வணிகா்களிடம் இலக்கு நிா்ணயித்து, அபராதம் விதித்து கட்டாய வசூலில் ஈடுபடும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT