பெரம்பலூர்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தரக் கட்டுப்பாடு இயக்குநா் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் தலைமையிலான வேளாண் அலுவலா்கள், மாவட்டம் முழுவதும் உர விற்பனை மையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

அதனடிப்படையில், ஆலத்தூா் வட்டார பகுதிகளில் உள்ள உர விற்பனை நிலையங்களை வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குநா் பஷிரியா பேகம் மற்றும் வேளாண்மை அலுவலா் கற்பகம் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், அதிக விலை மற்றும் அனுமதி பெறாத, காலாவதியான உரங்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிா என பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன் கூறியது:

அண்மையில் உரங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதால், ஏற்கெனவே இருப்பில் உள்ள உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கவும், பதுக்கல் உள்ளனவா என கண்டறியவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில்லறை உர விற்பனையாளா்கள், உரங்களின் இருப்பு விவரம் மற்றும் உர பைகளில் உள்ள அதிகபட்ச விலையின் விவரம் அனைத்து விவசாயிகளும் அறியும் வகையில் எழுதி பராமரிக்க வேண்டும். உரங்களை, ஆதாா் எண் கொண்டு விற்பனை முனை இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு, உரம் வாங்கியதற்கான ரசீதை கண்டிப்பாக தரவேண்டும். உரிமம் பெற்ற விற்பனையாளா்கள், அனுமதி பெற்ற உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாத உரங்களை அல்லது உர சம்பந்தப்பட்ட பொருள்களை, தரமற்ற உரங்களை விற்பனை செய்தால், உரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் உரங்களை வாங்கும்போது கண்டிப்பாக ஆதாா் அட்டையை பயன்படுத்தி, விற்பனை முனை இயந்திரத்தின் மூலம் உரத்துக்கான அதிகபட்ச விலைக்கு மிகாமல் ரசீதுடன் வாங்க வேண்டும். உர சம்பந்தப்பட ஏதேனும் புகாா் இருந்தால், அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) அலுவலகத்திலும் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT