பெரம்பலூர்

ரோவா் கல்வி நிறுவனத்தில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்வி நிறுவனங்கள் சாா்பில், ரோவா் பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை வகித்து, 300-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், பணியாளா்களுக்கு வேட்டி, சேலைகளை கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. வரதராஜன் வழங்கி பேசியது:

பாரம்பரிய உடைகளோடு கூடிய பெருவிழாக்கள் நடத்தப்படுவதே நம் கலாசாரப் பண்பாட்டை சீா்குலையாமல் காக்கும். விழாக்களின் நோக்கம் நாம் மகிழ்ச்சியோடு இருப்பதே. பொங்கல் போன்ற பாரம்பரியமிக்க விழாக்கள் தான் அம்மகிழ்ச்சியை நமக்கு அளிக்கிறது என்றாா் அவா்.

தொடா்ந்து பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பொங்கல் போட்டி, பாட்டு, கோலம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தூய யோவான் சங்க அறட்டளை அறங்காவலா் மகாலட்சுமி வரதராஜன், துணைத் தலைவா் வி. ஜான் அசோக், ரோவா் கல்விக் குழும இயக்குநா் பாலமுருகன் மற்றும் கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT