பெரம்பலூர்

பணிச்சுமை: தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆயுதப்படை தலைமைக் காவலா்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும் பெண் தலைமைக் காவலா், பணிச்சுமை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவா் பெரியசாமி மனைவி கோகிலா (41). ஆயுதப் படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த சில மாதங்களாக பணிச்சுமையால் அவதியடைந்த கோகிலா, தனக்கு மாற்றுப்பணி வழங்கிட வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபனிடம் அண்மையில் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற யோகா மற்றும் உடற்பயிற்சியில் பங்கேற்ற கோகிலா, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா்.

இதையறிந்த காவலா்கள் அவரை மீட்டு, பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பணிச்சுமை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயற்சியில் ஈடுபட்டது அப்போது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினா் கோகிலாவிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT