பெரம்பலூர்

சிவப்பு நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த யோசனை

DIN

சிவப்பு நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.எ.நேதாஜி மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வாலிகண்டபுரம் அருகிலுள்ள வல்லாபுரம் கிராமத்தில் பராமரிப்பின்றி, பாழடைந்த வீட்டில் கண்டறியப்பட்ட சிவப்பு நாவாய் பூச்சியால், அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி வே.எ. நேதாஜி மாரியப்பன், பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் பி. தோம்னிக் மனோஜ் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பூச்சியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைத்தனா்.

இதுபோன்ற சிவப்பு நாவாய் பூச்சி கண்டறியப்பட்டால், அதைக் கட்டுப்படுத்த பவுடா் வடிவில் கிடைக்கும் மாலதியான் அல்லது குளோரிபைரிபாஸ் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT