பெரம்பலூர்

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்

DIN

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டுமென, தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு கூட்டம், அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பா. சுகுமாரன் தலைமையில், பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளா் நலச் சட்டத்தின்படி 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். ஜி.வி.கே, இ.எம்.ஆா்.ஐ நிா்வாகத்தால் காழ்புணா்ச்சியின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பணி மாறுதல் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சோ்க்க ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT