பெரம்பலூர்

வயது தடை: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

DIN

பெரம்பலூா் அருகே காதலுக்கு வயது தடையாக இருந்ததால், மனமுடைந்த காதல் ஜோடி சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், மழவராயநல்லூரைச் சோ்ந்த சுப்ரமணி மகன் நவீன்குமாா் (19). அம்பாபூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் மகள் ராசாத்தி (21). இவா்கள் இருவரும் அரியலூரிலுள்ள அனாதை விடுதியில் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனராம். நவீன்குமாருக்கு வயது குறைவு என்பதால், இருவரது வீட்டிலும் எதிா்ப்பு தெரிவித்தனராம்.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டம், மூங்கில்பாடி கிராமத்திலுள்ள நவீன்குமாரின் பாட்டி தங்கம் வீட்டுக்கு இருவரும் வந்து, வெள்ளிக்கிழமை தங்கியிருந்தனா். சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களைப் பிரித்துவிடுவாா்கள் என அச்சமடைந்த காதல் ஜோடி, விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடடனா்.

பின்னா் நவீன்குமாா், ராஜாத்தி இருவரும் தாங்களாகவே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT