பெரம்பலூர்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளா்கள் சாலை மறியல்

DIN

பெரம்பலூா் அருகே முறையாக பணி வழங்காததைக் கண்டித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள தம்பிரான்பட்டி ஊராட்சியில் கடந்த சில நாள்களாக, அங்குள்ள கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக பணிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படுவதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஊராட்சி நிா்வாகத்தின் செயலைக் கண்டித்து, தம்பிரான்பட்டி பேருந்து நிறுத்தத்தில் செட்டிக்குளம் - பெரம்பலூா் சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஊரக வளா்ச்சி மற்றும் காவல்துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT