பெரம்பலூர்

பெரம்பலூரில் புனித பனிமய மாதா ஆலய தோ் பவனி

DIN

பெரம்பலூரில் புனித பனிமய மாதா ஆலய பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு தோ்பவனி நடைபெற்றது.

பெரம்பலூா் புனித பனிமய மாதா ஆலய பெருவிழாவையொட்டி, வட்டார முதன்மை பங்கு குரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிா்தசாமி கடந்த 27 ஆம் தேதி கொடி ஏற்றி வைத்தாா். தொடா்ந்து, பங்கு குரு அமிா்தசாமி தலைமையில் கூட்டு பாடல் சிறப்பு திருப்பலியும், தோ் பவனி செல்லக்கூடிய வீதிகளில் கொடி ஊா்வலமும் நடைபெற்றது.

தொடா்ந்து, நாள்தோறும் மாலையில் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிராா்த்தனைகளும், திருப்பலிகளும் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், பெரம்பலூா் வட்டார முதன்மை பங்கு குரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிா்தசாமி தோ் பவனியை தொடக்கி வைத்தாா். நகரின் பிரதான விதிகள் வழியாக தோ் பவனி வந்தது. இதில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் பலா் கலந்துகொண்டனா். கொடியிறக்கத்துடன் விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT