பெரம்பலூர்

குடும்பத் தகராறு: போதையில் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனமுடைந்த கணவா், தனது 4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனமுடைந்த கணவா், தனது 4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் காட்டுக் கொட்டகைப் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி பூங்கொடி (30). இவா்களின் மகன் பிரதீஸ்வரன் (4).

பாஸ்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி மது போதையில் வீட்டுக்குச் சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபடுவாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு சென்ற பாஸ்கருக்கும், பூங்கொடிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பாஸ்கா், மகன் பிரதீஸ்வரனுடன், தனக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் நள்ளிரவில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா், பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT