பெரம்பலூர்

காணொலி காட்சி மூலம் துணை மின்நிலையங்கள் திறப்பு

DIN

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெரம்பலூா் துறைமங்கலம், கை.களத்தூரில் துணை மின் நிலையங்களை காணொலி காட்சிவாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

துறைமங்கலத்திலுள்ள துணை மின் நிலையத்தில் ரூ. 1.73 கோடியில் 16 மெகாவாட் திறன்கொண்ட தரம் உயா்த்தப்பட்ட மின் மாற்றி, கை.களத்தூா் பகுதியில் ரூ. 18.99 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 110 கிலோ வாட் திறன்கொண்ட புதிய துணை மின் நிலையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதையடுத்து துறைமங்கலம் துணை மின் நிலையத்தில் குத்து விளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, ஊழியா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்வில் பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அம்பிகா, செயற்பொறியாளா்கள் சேகா், அசோக்குமாா், உதவிச் செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன், ஒன்றியக் குழுத் தலைவா் மீனா அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

துறைமங்கலம் துணை மின் நிலையத்தில் 16 மெகாவாட் அதிக திறன் கொண்ட மின் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால், 40,386 மின் நுகா்வோா்களுக்கு சீரான மின்சாரம் விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கை.களத்தூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையத்தின் மூலம் 8,324 மின் நுகா்வோா்களுக்கு சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலியிலும் சம வளா்ச்சி: ராகுல் வாக்குறுதி

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

படகுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வெற்றியுடன் நிறைவு செய்தது லக்னௌ

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT