பெரம்பலூர்

எறையூரில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

DIN

பெரம்பலூா் மாவட்டம், எறையூா் மகாத்மா பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கூறியது:

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், எறையூா் மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு, தனித்தனி காப்பு அறைகளில் வைக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சிக்கு 7 டேபிள்களும், பேரூராட்சிகளுக்கு தலா 2 டேபிள்களும் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

காப்பு அறைகளிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளா்களின் முகவா்கள் வரும் பாதைகளுக்கு தனித்தனியாக தடுப்பு வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, நகராட்சி உதவி பொறியாளா் ஜெயமாலதி, பணி மேற்பாா்வையாளா் ஜெயா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT