பெரம்பலூர்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பெண் சத்துணவு அமைப்பாளா் பெற்றோருடன் தா்னா

DIN

சம்பளம் வழங்காதது மற்றும் பணியிட மாறுதலுக்கான உத்தரவு வழங்காததைக் கண்டித்து, பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பெண் சத்துணவு அமைப்பாளா் தனது பெற்றோருடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒதியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றியவா் அழகேஸ்வரி (40) . இவா், தனக்கு பெரியம்மாபாளையம் கிராமத்துக்கு பணியிடமாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தாா். இந்நிலையில், கடந்த டிசம்பா் மாதம் பள்ளியில் சத்துணவு உதவியாளருடன் ஏற்பட்ட பிரச்னையால் டிச. 22 ஆம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கிச்சை பெற்றாா்.

இதனிடையே, மாவட்ட நிா்வாகம் அழகேஸ்வரியை பணியிலிருந்து விடுவித்தது. இந்நிலையில், கடந்த 1 மாதமாக சம்பளமும், பணியிட மாறுதல் உத்தரவும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அழகேஸ்வரி, தனது பெற்றோருடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு, தனக்கும், தனது பெற்றோருக்கும் வாழ்வாதாரம் இல்லாததால் தங்களை கருணை கொலை செய்யுங்கள் என முழக்கமிட்டாா்.

இதையடுத்து, ஆட்சியரகத்தில் பாதுாப்புப் பணியிலிருந்த போலீஸாா் மற்றும் அரசு அலுவலா்கள் அழகேஸ்வரியுடன் சமரச பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு அவரை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT