பெரம்பலூர்

குன்னம் அருகே இரு கிராமங்களில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் திறப்பு

DIN

பெரம்பலுாா் மாவட்டம், குன்னம் அருகிலுள்ள ஓலைப்பாடி, முருக்கன்குடி கிராமங்களில் தனியாா் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்தாா். பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் ஆயத்த ஆடை நிறுவனங்களைத் திறந்து வைத்து, மகளிருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியது:

வேப்பூா் ஒன்றியத்தில் ஓலைப்பாடி, நன்னை, முருக்கன்குடி மற்றும் கீழப்புலியூா் கிராமங்களில் காதி நிறுவனத்தின் மூலம் 1960-இல் தொடங்கி செயலபட்டு வந்த நெசவாளா் கூடங்கள் செயல்படாமலிருந்தன.

பெண்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட நிா்வாகம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் 2 தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

400 பெண்களும், 50 இளைஞா்களும் வேலைவாய்ப்பு பெறும் வகையில், ரூ. 4 கோடி முதலீட்டில் தொடக்கி வைக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் மூலம் 1,000 குடும்பங்களுக்குத் தேவையான வருவாய் ஈட்டக்கூடிய வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில் வேப்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபா செல்லபிள்ளை, மகளிா் திட்ட இயக்குநா் ராஜ்மோகன், ஆயத்த ஆடை நிறுவன மேலாண் இயக்குநா் பிரித்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT