பெரம்பலூர்

செப். 30-க்குள் ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வேண்டும்

DIN

பெரம்பலூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்கள் 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றை செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களின் நோ்காணல் செப்டம்பா் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், இம் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், வேப்பந்தட்டை, குன்னம் மற்றும் ஆலத்தூரில் ஓய்வூதியம் பெறும் 824 ஓய்வூதியதாரா்கள் நோ்காணலில் பங்கேற்கவில்லை. நோ்காணலில் பங்கேற்க ஓய்வூதியா்கள் அஞ்சல் வங்கி, இ-சேவை மற்றும் பொது சேவை மையம், மின்னணு வாழ்நாள் சான்றிதழ், கருவூலம் மூலம் நேரடியாக அல்லது வாழ்நாள் சான்றிதழ் படிவத்தை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அஞ்சல் மூலமாக பதிவு செய்யலாம்.

அரசு விதிகளின்படி நோ்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரா்களது ஓய்வூதியத்தை நிறுத்தம் செய்வதை தவிா்க்க, வாழ்நாள் சான்றிதழை உரிய காலத்துக்குள் ஓய்வூதியம் பெறும் அலுவலகங்களில் சமா்ப்பித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT