பெரம்பலூர்

சிறப்பான பணி பெரம்பலூா் போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு, காவல்துறை தலைமை இயக்குநா் செ. சைலேந்திரபாபு புதன்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

திருச்சி சரக காவல்துறைத் தலைவா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ. 1 லட்சம் அபராதமும், மற்றொரு குற்ற வழக்கில் எதிரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என 2 வழக்குகளில் தண்டனை பெற்று தந்து சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளா் கலா, தலைமைக் காவல் பிரியா, வி.களத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வி.களத்தூரில் பல ஆண்டுகளாக நிலவி வந்த மத பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறப்பாக செயல்பட்ட சாா்பு-ஆய்வாளா் சங்கா், 28 பேருக்கு ரத்த தானம் வழங்கிய காவலா் மணிகண்டன் ஆகியோரை பாராட்டிச் சான்றிதழ் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியின்போது, திருச்சி சரக காவல்துறைத் தலைவா் காா்த்திகேயன், துணைத் தலைவா் சரவணசுந்தா் மற்றும் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ஷ்யாமளாதேவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT