முகப்பு
பெரம்பலூர்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியா் கைது

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 1:13 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காட்டுராஜா (56). இவா், பெரம்பலூா் மாவட்டம், சிறுகன்பூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், அப் பள்ளியில் பயிலும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு காட்டுராஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளனா். இத் தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஆற்றுப்படுத்துநா் மகேஸ்வரி, மேற்கண்ட பள்ளிக்குச் சென்று செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட விசாரணையில், மாணவிகள் அளித்த புகாா் உண்மையென தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், தலைமை ஆசிரியா் காட்டுராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments