மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம்:அதிமுகவினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்
தமிழகத்துக்கு மாதம்தோறும் கிடைக்க வேண்டிய மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை விளக்கும் துண்டு பிரசுரங்களை தமிழக அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் வினியோகித்தனர்.
தமிழகத்துக்கு மாதம்தோறும் கிடைக்க வேண்டிய மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை விளக்கும் துண்டு பிரசுரங்களை தமிழக அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் வினியோகித்தனர்.மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அரசியல் காரணங்களுக்காக இந்த ஒதுக்கீடு மேலும் குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதுய இது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழகத்துக்கு மாதம்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அத்தியாவசியப் பொருள்களை மாநில அரசுக்கு வழங்கவேண்டியது மத்திய அரசின் கடமை. அந்தக்கடமையிலிருந்து தவறிய மத்திய அரசுதான் தற்போது தமிழகத்தில் நீடித்துவரும் பற்றாக்குறைக்குக் காரணம் என்பதை பொதுமக்களிடம் தெளிவு படுத்தும் வகையில் இந்த துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
புதுக்கோட்டை கிழக்கு மூன்றாம் வீதியில் உள்ள கூட்டுறவு மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி. விஜயபாஸ்கர், வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.சி. ராமையா, நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஆர். ராஜசேகரன், நகர்மன்றத்தலைவர்(பொ) எஸ். அப்துல்ரகுமான், நகர்மன்ற உறுப்பினர் க. பாஸ்கர், நிர்வாகிகள் கூகூர்பாலு, என். மாசிலாமணி, டி.சி.வி. ராசு, எம். செல்லம், வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
Advertisement
Advertisement
புதுக்கோட்டையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு குறித்து விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகிக்கின்றனர், தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி. விஜயபாஸ்கர், வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் உள்ளிட்டோர்.