புதுக்கோட்டை

கிராமப்புற அரசு மருத்துவர்கள் தர்னா

DIN

மேற்படிப்புக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் புதுகை அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்களின் மேற்படிப்புக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 29 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவிகித இட ஒதுக்கீடு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் 50 சதவிகித இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசு சரியாகச் செயல்படவில்லை என்றும், தமிழகத்தில் மீண்டும் 50 சதவிகித இடஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தர்னா போராட்டத்தில் மாவட்டத்திலுள்ள கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT