புதுக்கோட்டை

மேலத்தானியம் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஆவாம்பட்டியில் மண்ணால் குதிரை, காளை சிலைகள் வடிவமைக்கப்பட்டு, அவற்றை அலங்கரித்து வழிபாடு செய்தபிறகு, அங்கிருந்து மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஆவாம்பட்டி, மேலத்தானியம், எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி, முள்ளிப்பட்டி, வெள்ளையக்கவுன்டம்பட்டி, படுதினிப்பட்டி, அம்மாபட்டி, வடக்கிப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT