புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கிராமப்புற இளைஞர்களுக்கு  பழுது நீக்க இலவசப் பயிற்சி

DIN

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் குளிர்ச்சாதனங்கள் பழுது பார்த்தல்  குறித்து 30 நாட்கள்  இலவசப் பயிற்சி அளிக்கப்படுமென  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் ஆர். சரண்யா வெளியிட்ட தகவல்:
கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இருபால் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்கள்
சுயதொழில் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன்  பல்வேறு தொழிற்பயற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது  குளிர்ச்சாதனங்கள் பழுதுபார்த்தல் குறித்து  30  நாட்கள்   பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் சேர விரும்பும் 8 -ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ள 18 வயது முதல் 40 வயதுடைய கிராமப்புற  ஆண்கள், பெண்கள் தங்களது  3 புகைப்படங்கள், மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை
நகல்களுடன் செல்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு வரும் 30.11.2017  -க்குள்,    நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய
சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,  1506/2,   மேல 4-ம்  வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை. 622 001 -என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.  தொடர்புக்கு 04322-225 339 , 70109-57772.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT