முகப்பு
புதுக்கோட்டை

த.மா.கா சார்பில் கையெழுத்து இயக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:32 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி மத்திய அரசுக்கு அனுப்பப்படுமென தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்டத் தலைவர் கூகூர் சண்முகம் தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திரளானோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments