புதுக்கோட்டை

விராலிமலையில் விவசாயிகளுக்குப் பயிற்சி

DIN


விராலிமலை வட்டாரத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் (2018-19) வேளாண் இயந்திரமயமாக்குதல் பற்றிய பயிற்சி விவசாயிகளுக்கு சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்பக் குழு அமைப்பாளரும் வேளாண் உதவி இயக்குநருமான ஆ. பிரபாவதி தலைமை வகித்து பேசினார். புதுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை இளநிலைப் பொறியாளர் சேகர் வேளாண் இயந்திரமயமாக்குதல் பற்றியும் வேளாண் இயந்திரம் வாங்குவதற்கு வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்படும் மானியம்,வேளாண் இயந்திரமயமாக்குதலின் அவசியம். வேளாண் இயந்திரங்களை இயக்கும் முறை, பராமரிக்கும் முறை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
உதவி வேளாண் அலுவலர் கூ. சங்கரபாண்டியன் வேளாண் துறையில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் அ. ஆரோக்கியராஜ் வரவேற்றார். இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு தொழில்நுட்பக் கையேடு, குறிப்பேடு வழங்கப்பட்டது. உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆ. சக்திவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT