புதுக்கோட்டை

போராட்ட காலத்தில் வேறு வழித்தடத்தில் இயக்கம்: காரையூரில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு

DIN

அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின்போது, வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்தை பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின்போது காரையூர் வழித்தடத்தில் புதுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்து ஒரு வாரமாக இவ்வழித்தடத்தில் இயக்கப்படவில்லை.
 அதிக வசூலை கருத்தில் கொண்டு இந்த தனியார் பேருந்து வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டது. 
இதனால், காரையூர் பகுதி மக்கள் பேருந்து வசதியின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை இரவு வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
 இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை முதல் குறிப்பிட்ட தனியார் பேருந்து காரையூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பேருந்தினை பொதுமக்கள் சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காரையூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்தை விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT