புதுக்கோட்டை

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பாவை விழா

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கோயிலின் செயல் அலுவலர் ஏஎல். வைரவன் தலைமை வகித்தார். ஆய்வாளர் கோ.கண்ணையன் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிக்கு கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சிஎஸ். முருகேசன் நடுவராக இருந்து வழிநடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோயிலின் தலைமை அர்ச்சகர் மு.முத்துவயிறு பரிசு வழங்கினார். புதுக்கோட்டை மனோன்மணியம் கோயில் பணியாளர் சண்முசுந்தரம், கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அம்பாள் மெட்ரிக் பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT