புதுக்கோட்டை

பயிர் காப்பீடு பிரீமியம் செய்வதற்கான முகாம் இன்று தொடக்கம் 

DIN

பொன்னமராவதி வட்டாரத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான முகாம் வியாழக்கிழமை (நவ.15) தொடங்குகிறது.
இதுகுறித்து பொன்னமராவதி வேளாண் உதவி இயக்குநர் எட்வர்ட் சிங் வெளியிட்ட அறிக்கை: 
பொன்னமராவதி வட்டார ஒருங்கிணைந்த வேளா ண்மை விரிவாக்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையத்தில் நடைபெறும் முகாமில், கடன் பெறா விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள புயலால் தமிழ்நாட்டில் அதிக பாதிப்பு ஏற்பட  வாய்ப்பு உள்ளது. எனவே நடப்பு சம்பா நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு ஏக்கருக்கு ரூ.407 செலுத்தினால் இழப்பீட்டுத் தொகையாக ரூ.27,100 கிடைக்க வாய்ப்புள்ளது. 
வட்டாரத்தைச் சேர்ந்த கடன்பெறா அனைத்து விவசாயிகளும் சிட்டா அடங்கல், பயிர் சாகுபடி சான்று, ஆதார் நகல், புகைப்படம் மற்றும் பிரீமியத் தொகை ஆகியவற்றுடன் காப்பீடு செய்து பயன் பெற வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT