புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியத்தில் ஜெனரேட்டர் உதவியுடன் குடிநீர் விநியோகம்

DIN


பொன்னமராவதி ஒன்றியத்திற்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தொட்டிகளில் நீரேற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கஜா புயலின் தாக்கத்தினால் பொன்னமராவதி பகுதியில் சுமார் 900 மின்கம்பங்கள் சேதமடைந்து மின்விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீரின்றி கிராம ஊராட்சிகளைச் சார்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். கிராம ஊராட்சி மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்க்கும் வகையில் 42 ஊராட்சிகளுக்கும் ஜெனரேட்டர் கொண்டு செல்லப்பட்டு அதன்மூலம் குடிநீர் தொட்டிகளில் நீரேற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கல்லம்பட்டி,கொப்பனாபட்டி, கண்டியாநத்தம், ஆலம்பட்டி, காட்டுப்பட்டி, காரையூர் உள்ளிட்ட 42 ஊராட்சிகளுக்கும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வழங்கப்படுவதை வட்டார வளர்ச்சி அலுவலர் து.குமரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT