புதுக்கோட்டை

இலுப்பூர் கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி 

DIN

இலுப்பூர் கல்வி மாவட்டத்தின் சார்பாக ஜவாஹர்லால் நேரு  அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் க. குணசேகரன் தலைமை வகித்து பேசினார். கண்காட்சியில் விராலிமலை,பொன்னமராவதி,இலுப்பூர்,குன்றாண்டார் கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 109 பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். 109 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.  தேர்ந்தெடுக்கப்பட்டவை அக். 15-ல் நடைபெறும் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி உதவித் திட்ட அலுவலர் இரா. ரவிச்சந்திரன், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செ. பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT