புதுக்கோட்டை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்  நடத்தினால் கடும் நடவடிக்கை

DIN


கோடை விடுமுறையில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. வனஜா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோடை வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. ஆனால் குழந்தைகள் நலனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒரு சில பள்ளிகள் தங்களுடைய பெயர்களைத் தக்க வைத்து கொள்ள அடுத்த ஆண்டுக்கான பாடத்தை விடுமுறை நாள்களிலேயே  எடுக்கின்றன. இதுகுறித்த தகவல் கிடைக்கப் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 3 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் தொடங்கும்.  பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள்,  சீருடைகள், நோட்டுகள் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT